என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » வில்லிவாக்கம் தீ மிதி விழா
நீங்கள் தேடியது "வில்லிவாக்கம் தீ மிதி விழா"
வில்லிவாக்கம் தீ மிதி விழாவில் நெருப்பு குண்டத்துக்குள் விழுந்து 2 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அம்பத்தூர்:
வில்லிவாக்கம் தெற்கு மாட வீதியில் காளியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆடி மாத திருவிழாவையொட்டி நேற்று தீ மிதி விழா நடந்தது.
விழாவில் ஏராளமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டு நெருப்பு குண்டத்துக்குள் இறங்கி தீ மிதித்தனர். அப்போது அயனாவரத்தைச் சேர்ந்த கலையரசன் (34) என்பவர் குண்டத்துக்குள் தவறி விழுந்தார்.
அதே போன்று வில்லிவாக்கம் டீச்சர்ஸ் காலனியைச் சேர்ந்த மனோகரனும் (52) கால் தவறி நெருப்பு குண்டத்துக்குள் விழுந்தார். இதனால் இவர்கள் இருவரது உடல் முழுவதும் தீயில் கருகியது.
உடனே மீட்கப்பட்ட இவர்கள் 2 பேரும் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். வில்லிவாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
×

X